EelamEROS.com
Eelam Revolutionary Organisation of Students
 
  A official website of Eelam Revolutionary Organisation . www.eelameros.com
   

  EROS Homepage

  வாசல்

  நமது செய்திகள்
  கவிதைகள்
  கட்டுரைகள்
  வாசகர்கடிதங்கள்
  கேள்வி-பதில்கள்

  ஈரோஸ்

  எம்மைப்பற்றி
  தொண்டுநிறுவனம்
  உதவித்திட்டங்கள்
  புகைப்படங்கள்
  மாவீரர்கள்

  மறு தளங்கள்
 
   தமிழ்நெட்
   புதினம்
   சங்கதி
   நியூஸ் தமிழ்நெட்
   புளட்
   தமிழ் நாதம்
   நிதர்சனம்
   தமிழர்முன்னணி

  தொடர்புகட்கு

  மின்னஞ்சல்
  தொலைபேசி
  தொலைநகல்


ஈரோஸ் என்பதின் அர்த்தம் ஈழப்புரட்சிகர மாணவர் ஒன்றியம். ஈழப் புரட்சிகர ஒன்றியம் என்றும் அறியப்பட்டது. இவ்வியக்கம் இலங்கையில் உருவான மிக முக்கிய தமிழ் இராணுவ அமைப்புக்களில் ஒன்று. ஆரம்பத்தில் மிகவும் தீவிரமாக இயங்கிய இராணுவ அமைப்புகளில் ஈரோஸ்ம் முக்கியமானது ஒன்று.

1975ம் ஆண்டு இளையதம்பி இரட்ணசபாபதியும், நேசதுரை திருநேசனும் (சங்கர்ராஜி என்று அறியப்பட்டவர்) சேர்ந்து இலண்டனில் இருந்தவாறு இந்த அமைப்பை தொடங்கினர். மாக்சிசத்தை கொள்கைப் பின்னணியாகக்கொண்ட ஈரோஸ் அமைப்பு தமிழர்களின் பிரச்சினையை மாக்சிச அடிப்படையாக வைத்து தீர்வுகாணலாம் என்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் அங்கத்தவர்கள் அனேகமாக யாழ்குடாவை விட மட்டக்களப்பு அம்பாறை போன்ற கிழக்கு இலங்கையில் இருந்து திரட்டப்பட்டனர். இதன் விழைவாக இந்த அமைப்பு இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சினையை கூடுதலாக நோக்கத்தொடங்கியது. ஒரு திட்டத்தை நான்கு கட்டங்களாக பிரித்து தமிழ்பேசும் முஸ்லிம் மக்களையும் தமிழர்போராட்டத்தில் இணைத்துக்கொள்வதற்காக அவர்களுடன் உறவாடி அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்து அவர்களையும் போராட்டத்தில் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

1976ல் பலஸ்தீன விடுதலைமுன்னணியும், அபுஜிகாட் எனும் இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி ராணுவ கொரில்லா தாக்குதல்களை தமது அங்கத்தவர்களுக்கு பயிற்சிகொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இதே சமயம் ரெலோ இயக்கமும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினரிடம் இயக்க பயிற்சிகளை கொடுக்க முயற்சிகள் எடுத்தனர். பின்னாள் ஆரம்பித்த பல தமிழ் இயக்கங்களின் தலைவர்கள்கூட இந்த பயிற்றிமுகாம்களில் கலந்து பயிற்சிகள் எடுத்துக்கொண்டார்கள் என்று சொல்லவேண்டும்.

மற்றைய இயக்கங்களான LTTE, TELO மாதிரி தமிழர்போராட்டத்தில் தீவிரமாக ஈரோஸ் பெரிய நடவடிக்கைகளில் இறங்கவில்லை. அதன் தலைவர்கள் லண்டனிலே தங்கியிருந்தது அதற்கான ஒரு காரணமும் கூட. ஈரோஸ் அமைப்பின் குறிப்பிடத்தக்க ராணுவநடடிக்கைகள் 1984, 1985ல் நடத்திய சில குண்டுவெடிப்புக்களே.

இந்தக்காலகட்டத்தில் ஈரோஸிலிருந்து பத்மநாபாவும் அவரின் ஆதரவாளர்கள் சிலரும் ஈரோஸிடமிருந்து பிரிந்து ஈபி.ஆர்.எல்.எப் என இன்னுமொரு இயக்கத்தை 1980ல் தொடங்கினர். எப்போதும் தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டுவதில் முன்நின்று உழைத்த சங்கர்ராஜி அவர்கள் இப்பிளவு குறித்து மிகவும் மனம் வருந்திய நிலையிலேயே காணப்பட்டிருந்தார். எல்லா இயக்கங்களையும் ஒன்று சேர்த்து ஒரு போராட்ட இயக்கத்தை அமைப்பதற்காக 1984ல் ”ஈழத்தேசிய விடுதலை முன்னணி” எனும் அமைப்பை ஆரம்பிக்க ஈரோஸ் மும்முரமாக வேலைசெய்தது. ஆனால் 1986ல் அக்கனவு சிதைந்தது.

இந்திய அமைதிப்படை வந்தநேரம் ஈரோஸ் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தது. இந்தக்கட்சி பின்நாள் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 13தொகுதிகளில் வெற்றிபெற்றது.

1980ன் பிற்பகுதியில் ஈரோஸ்க்குள் கருத்துமோதல்கள் பிளவுகள் தோன்றின. அதாவது விடுதலைப்புலிகளை இராணுவ அடிப்படையில் உதவிபுரிவதா, இல்லையா என்ற ரீதியில் கருத்துவேறுபாடுகள் தோன்றின. 1987ல் இயக்கம் முற்றாகவே பிளவுபட்டது. இதன் முக்கிய இரண்டுதலைவர்கள் வி.பாலகுமாரன், ஆகக்கூடிய அங்கத்தினருடன் LTTEயுடன் சேர்ந்தார். ஆயுதம் ஏந்துவதுதான் தமிழர்களுக்கு விமோசனம். ஆப்படி செய்யாவிட்டால் தமிழ்மக்களுக்கு செய்யப்படும் துரோகம் என்று பாலகுமார் குறிப்பிட்டார். மற்றத்தலைவரான சங்கர்ராஜி அரசியல்கட்சியாக இயங்குவது என்று முடிவுசெய்தார். ஆதன் பெயரும் ஈரோஸ் தான்.

 

Designed by: arenawebdesign.com